யாழில் சுமத்திரனின் உருவ பொம்மை எரிப்பு!

யாழில் சுமத்திரனின் உருவ பொம்மை எரிப்பு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்திய ஆபிரகாம் சுமந்திரன் தாமாகவே துரோகி என ஒப்புக்கொள்ளும் உருவப்பொம்மை ஒன்று யாழ்ப்பாணம் நல்லூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு சமீபமாக சுமந்திரனின் உருவப்பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மின்சாரத் தூண் ஒன்றுடன் பிணைக்கப்பட்ட நிலையில் இந்த உருவப்பொம்மை காணப்படுகின்றது. 

நான் ஒரு தமிழினத் துரோகி என்ற வாசகம் சுமந்திரனின் கழுத்தில் மாட்டப்பட்டு, செருப்புக்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. 

சுமந்திரனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உருவப்பொம்மை வைக்கப்பட்டுள்ளமை முக்கியம் பெற்றுள்ளது.

போராட்டத்தையும் தேசியத் தலைவரையும் நேசிக்கும் இளைஞர், யுவதிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சுமந்திரனின் போராட்ட விரோதக் கருத்திற்கு பலத்த கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments