யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

You are currently viewing யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

யாழில் குடும்பஸ்தரொருவர் தவறான முடிவெடுத்து தொடருந்து முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (09.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் கச்சேரிக்கு முன்பாக உள்ள தொடருந்து கடவையடிக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி தொடருந்து மீது பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலமானது தொடருந்தில் எடுத்து செல்லப்பட்டு யாழ். தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply