யாழில் தொடரம் ரவுடிகளின் அட்டகாசம் இருவர் காயம்!

யாழில் தொடரம் ரவுடிகளின் அட்டகாசம் இருவர் காயம்!

யாழ்.வடமராட்சி – புலோலி காந்தியூர் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சண்டையில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், வர்த்தக நிலையம் ஒன்று ரவுடிகளால் அடித்து உடைக்கப்பட்டது.

ஏற்கனவே பகைமை கொண்ட இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது- 22) புவனேஸ்வரன் குகராஜ் (வயது- 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் நேற்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறை மேற்கொண்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments