யாழில் தோட்டத்தில் நின்ற இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழப்பு !

You are currently viewing யாழில் தோட்டத்தில் நின்ற இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழப்பு !

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் மின்னல் தாக்கியதில் 34 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்றவேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்.தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை திடீரென  இடி மின்னலுடன் கடும் மழை  பெய்திருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments