யாழில் பட்டப்பகலில் வீடுகள் புகுந்து திருட்டு இருவர் கைது!

யாழில் பட்டப்பகலில் வீடுகள் புகுந்து திருட்டு இருவர் கைது!

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் வீடுபுகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 7 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேலையில் பட்டப்பகலில் வீடுகளை உடைத்து நகைகள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் போது நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் புகையிர நிலைய வீதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள