யாழில் பாய்ந்தது தனிமைப்படுத்தல் சட்டம்!

யாழில் பாய்ந்தது தனிமைப்படுத்தல் சட்டம்!

தனிமைப்படுத்தலில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து சண்டித்தனம் செய்தவர் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவர் மீது சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. 

இந்த சம்பவம் பருத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் முன் பாதுகாப்பு நடவடிக்கையாக வீடொன்றில் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த வீட்டுக்கு சென்றிருந்த நபர் ஒருவர் கற்களை வீசி தாக்கியதுடன், தகாதவார்த்தைகளால் பேசியதுடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரை தாக்க முயன்றுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதை அவதானித்தவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். 

எனினும் ஏற்கனவே அந்த நபர் சண்டித்தனம் செய்வதை தனிமைப்படுத்தலில் இருந்த மற்றொருவர் வீடியோ எடுத்துவைத்திருந்த நிலையில் அதனடிப்படையில் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். மேலும் குறித்த சண்டியன் மீது சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments