யாழில் பிரபல தனியார் விடுதி நீச்சல் தடாகத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing யாழில் பிரபல தனியார் விடுதி நீச்சல் தடாகத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரை சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் குறித்த நபர் நீச்சல் தடாகத்தில் சடலமாக காணப்படுவதனை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண சிறீலங்கா காவல்துறைக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண சிறீலங்கா காவல்துறையனர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் கொலையா இல்லையா என்பது தொடர்பில் சிறீலங்கா காவல்துறையனர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments