யாழில் பெண்ணிடம் இழிவாக கேட்டவருக்கு நடந்த விபரீதம்!

யாழில் பெண்ணிடம் இழிவாக கேட்டவருக்கு நடந்த விபரீதம்!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் “ரேட்” எவ்வளவு? என கேட்டவரை கேட்ட இடத்திலேயே துாக்கிபோட்டு மிதித்த பெண் பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கின்றார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து நல்வாய்ப்பு சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.

தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அவ்வழியாக வந்த அந்த பெண்ணை 

கண்ட குறித்த நல்வாய்ப்புச் சீட்டுக்கள் விற்பனை செய்யும் நபர் மீண்டும் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்துள்ளார். உதைத்ததுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத அந்த பெண் 

அவரை காவல் நிலையம் வருமாறு கோரி இழுத்துச் சென்றுள்ளார். இதன்போது அந்த நபர் பெண்ணின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடுமாறு கதறியதை அடுத்து அவரை பிழைத்து போகுமாறு சொல்லிய அந்த பெண் இனி இவ்வாறு 

பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் நிலமை மோசமாகும் என்று எச்சரித்துச் சென்றுள்ளார்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments