யாழில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அலைபேசி திருடும் கும்பலில் ஒருவர் கைது!

You are currently viewing யாழில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அலைபேசி திருடும் கும்பலில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சிறீலங்கா காவற்துறையினர் கூறினர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை சந்தேக நபர் அபகரித்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் மூத்த சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை சிறீலங்கா காவற்துறைபரிசோதகர் நிகால் பிரான்சிஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அலைபேசிகளை தவறவிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள் அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை

பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர்.

இளைஞனை மடக்கி பிடித்த சக பயணிகள், யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் சிறீலங்கா காவற்துறை காவலரணில் ஒப்படைத்தனர்.என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments