யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

You are currently viewing யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (ஜன 23) பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.              இதேவேளை breaking

நெல்லியடி அரச புரனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட புலனாய்வுக் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நெல்லியடி காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், உதவி பரிசோகருமான ரத்நாயக்கா தலைமையில் குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி உப்பு வல்லை சந்திப்பகுதியில் இரவு (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குப்பிளான் வடக்கு குப்பிளானை சேர்ந்த 28 வயது இளைஞன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சிறீலங்கா காவற்துறையினரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments