யாழில் மனைவியை கொலைசெய்ய சென்ற கொள்ளையன் கைது!

யாழில் மனைவியை கொலைசெய்ய சென்ற கொள்ளையன் கைது!

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத சம்பவங்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றங்களில் 22 வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நபர் கைகுண்டு மற்றும் தாலி கொடியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபருடைய மனைவி வேறு ஒரு நபருடன் தென்மராட்சியில் வசித்துவரும் நிலையில் அவரை கொலை செய்யும் நோக்குடன் குறித்த நபர் கைகுண்டுடன் உரும்பிராய் ஊடாக சாவகச்சோி நோக்கி பயணித்தபோது இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

வவுனியாவில் சங்கிலி அறுப்பு குற்றத்துக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் குறித்த நபருடைய மனைவி இவரை பிரிந்து யாழ்.தென்மராட்சியில் வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் மனைவியுடன் வாழ்பவரை கொலை செய்யும் நோக்குடன்

பயணித்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவரின் இடுப்பில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கைகுண்டு, மற்றும் கொள்ளையடித்த 16 பவுண் ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கொள்ளையடித்த ஆபரணங்களை வாங்கியமை, விற்பமை

மற்றும் உடமையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் 3 பெண்கள் அடங்கலாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் விசாரணையில் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments