யாழில் மருத்துவபீட மாணவன் மீது வெறித்தாக்குதல்!

யாழில் மருத்துவபீட மாணவன் மீது வெறித்தாக்குதல்!

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஏ.இந்திரன் , வயது 31 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த மருத்துவ பீட இறுதியாண்டு மாணவனே இவ்வாறு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பகுதியில் வீட்டிற்கு அண்மையில் பிரதான வீதியில் இருந்த வர்த்தக நிலையத்திற்கு சென்று திரும்பிய நிலையில் இரு உந்துருளியில் பயணித்த நால்வர் தலைக் கவசத்தினால் மாணவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்கப்பட்ட மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நுலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments