யாழில் மாணவி ஒருவர் தற்கொலை!

யாழில் மாணவி ஒருவர் தற்கொலை!

தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்ட மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி 18 என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவி சுழிபுரம் மத்தியில் வசித்து வருகின்றார். தொடர்ச்சியாக மேற்படி மாணவி மூச்சுவிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளார். இதன் போது பாடசாலையிலும் மயங்கி வீழ்ந்துள்ளார்.

நேற்றையதினம் குறித்த மாணவி தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாக தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு தாயார் வைத்தியசாலை செல்வோம் என கூறியுள்ளார்.

எனினும் தயார் இல்லாத நேரம் பார்த்து தவறான முடிவினை எடுத்துள்ளார். உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த போதும் மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments