யாழில் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த மேசன் தொழிலாளி பரிதாப மரணம்!

You are currently viewing யாழில் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த மேசன் தொழிலாளி பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த மேசன் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகராக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

“வீட்டுக் கட்டடத்தின் மேல் தளத்தில் முன் பகுதிக்குத் தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments