யாழில் யுவதிகளுக்கு நடந்த நிலைமை!!

You are currently viewing யாழில் யுவதிகளுக்கு நடந்த நிலைமை!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்று (08) மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது….

”இதன்போது கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து பெண் ஒருவர் தப்பித்து வந்து மக்களின் உதவியுடன் கொடிகாமம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.”’

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சுன்னாகம் பகுதியில் இருந்து பெண்கள் இருவர் கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இருவரை சந்திக்க வந்துள்ளனர்…

இதன்போது இரு பெண்களையும் கொடிகாமம் பகுதியில் இருந்து மாசேரி பகுதிக்கு அழைத்து சென்றனர்…

அவ்வேளை குடத்தனை பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் குழுவொன்று அப்பெண்களை கடத்தி செல்ல முற்பட்ட வேளை ஒரு பெண் அவலக் குரல் எழுப்பியவாறு அப்பகுதியில் தப்பி பாதுகாப்பு கோரி கொடிகாமம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்….

இவ்வாறு சரணடைந்த பெண் பொது மக்களின் உதவியோடு பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கொடிகாமம் காவல்த்துறையினரும் பருத்தித்துறை காவல்த்துறையினரும் இணைந்து மற்றைய பெண், காதலர்கள் என்று கூறப்படும் இருவர் மற்றும் கடத்தல் சந்தேக நபர்கள் உள்ளிட்டோரை வலை வீசித் தேடி வருகின்றனர்….

”சம்பவத்தில் தொடர்புடைய காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரும் குறித்த பெண்கள் இருவரையும் திட்டமிட்டு அழைத்து,.. இவ்வாறு ஏனையோருடன் இணைந்து இந்த கடத்தல் முயற்சியை மேற்கொண்டிருக்கலாம்” என்று சிறீலங்கா காவல்த்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன….

பகிர்ந்துகொள்ள