யாழில் றவுடிக்கும்பலை சேர்ந்த 9 பேர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது!

யாழில் றவுடிக்கும்பலை சேர்ந்த 9 பேர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் வன்முறை கும்பலை சேர்ந்த தனுரொக் உள்ளிட் 9 வன்முறையாளர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் 9 பேரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தனுரொக் உள்ளிட்ட 9 பேர் ஒன்றுகூடியுள்ளதால் வன்முறைச் சம்பவம் இடம்பெறலாமென கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும் சந்தேக நபர்கள் 9 பேருக்கும் எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லை என்றும் முறைப்பாடுகள் எவையும் மானிப்பாய் பொலிஸுல் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

தனுரொக் உள்ளிட்ட 9 பேரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள