யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது விளக்கமறியலில்!

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது விளக்கமறியலில்!

யாழ்.நகருக்கு வரும் இளைஞர்களை மிரட்டி தொலைபேசிகளை பறித்துச் செல்லும் வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

யாழ்.நகரை அண்டியுள்ள நாவலர் வீதி, கைலாச பிள்ளையார்யார் கோவிலடி, கந்தர்மடம், இந்துக்கல்லுாரிக்கு பகுதிகளில் இந்த வழிப்பறி கும்பல் வீதியால் பயணிக்கும் 

இளைஞர்களை வழிமறிக்கும் கொள்ளை கும்பல் தங்களுடைய தங்கையை படம் எடுத்ததாக கூறி அச்சுறுத்தி தொலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பதுபோல் பாசாங்கு செய்து 

தொலைபேசியுடன் தப்பி ஓடிவிடுவர். இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், 

பறித்துச் செல்லப்பட்ட தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், அந்த தொலைபேசி வழிப்பறி கும்பலால் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் தொடரப்பட்ட விசாரணைகளில் அரியாலையை சேர்ந்த இருவரும், இராசாவின்தோட்டம் பகுதியை சேர்ந்த ஒருவருமாக 25 வயதுக்குட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

குறித்த 3 பேரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பறித்து செல்லப்பட்ட தொலைபேசியை வாங்கியவரை 

பிணையில் செல்ல அனுமதித்ததுடன் சந்தேகநபர்கள் 3 பேரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த விண்ணப்பம் செய்த நிலையில், அடையாள அணிவகுப்புக்கு உட்படாமல் தம் குற்றங்களை ஒப்புக் கொள்வதாக சந்தேகநபர்கள் மன்றில் கூறிய நிலையில், 

இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய நீதிவான்  ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments