யாழில் வாள்வெட்டு கும்பலை தேடி பிடித்த மோப்ப நாய்!

யாழில் வாள்வெட்டு கும்பலை தேடி பிடித்த மோப்ப நாய்!

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்ட கும்பலை கோப்பாய் பொலிஸாரின் “றொக்கி” என்ற மோப்ப நாய் சுமார் 6 கிலோ மீற்றர் துாரம் சென்று கண்டுபிடித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை வாளை காட்டி அச்சுறுத்தி பெருமளவு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. 

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாரின் ்“றொக்கி” என்ற நாய் பயன்படுத்தப்பட்ட நிலையில், 

சுன்னாகம் – மின்சார நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றினை நோக்கி மோப்ப நாய் சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நியைலில் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 

அவர் கைது செய்யப்பட்டதுடன், வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டிருக்கின்றது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments