யாழில் வாள்வெட்டு 5பேர் காயம்!

யாழில் வாள்வெட்டு 5பேர் காயம்!

சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இரண்டு வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

நுணாவில் பகுதியில் நேற்று முன்னாள் மதியம் வீதியால் சென்று கொண்டிருந்த 16வயதுடைய சிறுமிய ஒரு குழுவினர் வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இரவு குறித்த சிறுமியின் சகோதரனான 24 வயதுடைய எஸ்.இளங்கீரன் என்பவரையும் அதே குழுவினார் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். அவரும்இ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பை சேர்ந்த 28 வயதுடைய ஜெயசீலன் ஜெனீலன் 56 வயதுடைய ஜெயசீலன் நந்தினிதேவி 34 வயதுடைய எஸ்.ரவிந்திரகுமார் ஆகியோர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments