யாழில் வாள்வொட்டு சந்தேக நபர் ஒருவர் கைது-இயக்குனர் பிரான்சிலா?

யாழில் வாள்வொட்டு சந்தேக நபர் ஒருவர் கைது-இயக்குனர் பிரான்சிலா?

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைகளின் பிரதான சூத்திரதாரிகள் ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்சில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த நிரோஷ் என்பவரே பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று காவல்த்துறையினர் சிறீலங்கா குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சியில் தலைமைவாகியிருக்கு ஓட்டுமடம் சுமன், அங்கு தாக்குதலை நடத்த திட்டமிட்ட நிலையில் அவரது சகா கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அவரது கொக்குவில் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சிறப்பு அதிரடிப் படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர்

நீர்வேலி, இணுவில், உடுவில், மானிப்பாய் மற்றும் ஓட்டுமடத்தில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments