யாழில் வாழ்வெட்டு கொள்ளை சம்பவங்கள் !

யாழில் வாழ்வெட்டு கொள்ளை சம்பவங்கள் !

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் வீதியால் சென்றவரை வழிமறித்த வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. 

இதேவேளை யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்து நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் வீட்டில் இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகள்

களவாடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments