யாழில் வீடுபுகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்மீது வாள்வெட்டு!

You are currently viewing யாழில் வீடுபுகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்மீது வாள்வெட்டு!

யாழ்ப்பணம் – சாவகச்சேரி பகுதியில் வீடொன்றினுள் கொள்ளையிடும் நோக்குடன் உட்புகுந்த கொள்ளையர்கள் தமது திட்டம் நிறைவேறாத நிலையில் குடும்ப பெண்ணை வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை தாசன் தோப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் முகங்களை துணிகளால் மறைத்துவாறு கைகளில் கூரிய ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று புகுந்துள்ளது.

அதன் போது வீட்டில் இருந்தவர்கள் அபாய குரல் எழுப்பியதை அடுத்து , கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்தும், குறித்த கொள்ளைக் கும்பல் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள