யாழில் வெடிகுண்டு யார் வைத்தது-அகற்ற நடவடிக்கை!

யாழில் வெடிகுண்டு யார் வைத்தது-அகற்ற நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வலிகாமம் வலயக்கல்வி பணிமனைக்கு அண்மையில் வெண்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.

குறித்த வெடிகுண்டு நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று பெறப்பட்டு அதனை அகற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன…
வடக்கில் தமிழர் வாழ் இடங்களில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு வீதிசோதனை நடவடிக்கைகள் மற்றும் படையினரின் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெடிகுணடு யார் வைத்தது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments