யாழில் 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட மூவருக்கு கொரோனா!

You are currently viewing யாழில் 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட மூவருக்கு கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (மே-31) இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலையில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தரப்பில் இருந்து அருவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில்,

யாழ். போதனா வைத்தியசாலையில், பிறந்து 10 நாட்களேயான பெண் குழந்தை உட்பட மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தை தவிர, உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, உயிரிழந்த பின்னர் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் 74 வயது பெண் மற்றும் 69 வயது ஆண் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments