யாழில் 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்!

யாழில் 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் தனிமைப்படுத்தலில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்த்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தொற்றுக்குள்ளானவர்களில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர்

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த ஒருவர், மன்னார் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர், விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவர்

மற்றும் மருதங்கேணி வைத்தியசாலையில் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 4 பேர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments