யாழில். -60, மன்னாரில் 55 பேர் உட்பட வடக்கில் நேற்று 131 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழில். -60, மன்னாரில் 55 பேர் உட்பட வடக்கில் நேற்று 131 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 60 மற்றும் மன்னாரில் 55 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 131 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் குறைந்தளவு தொற்று நோயாளர்களே நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 03 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட அதேவேளை, வவுனியாவில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதிய தொற்று நோயாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,462 -ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சியில் -1,400, முல்லைத்தீவில் – 1,248, வவுனியாவில் -1,335, மன்னாரில் 885 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments