யாழ்நோக்கி பயணித்த புகையிரதம் யானையுடன் மோதி விபத்து!

யாழ்நோக்கி பயணித்த புகையிரதம் யானையுடன் மோதி விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற நகர்சேர் கடுகதி புகைரதம் கனராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை.புகையிரதம் மோதியதில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் யானையின் உடற்பகுதி புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால் புகையிரத பயணம் பல மணி நேரமாக தடைப்பட்டுள்ளது. ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றமையால் நீண்ட நெரத்தின் பின்னர் புகையிரதம் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து ஒழுங்க செய்யப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments