யாழ்,பருத்தித்துறை நகரில் ஆசிரியர்கள் போராட்டம்!

You are currently viewing யாழ்,பருத்தித்துறை நகரில் ஆசிரியர்கள் போராட்டம்!

24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, யாழ். நகரில், இன்று வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை

சம்பள முரண்பாடு மற்றும் சேர். ஜோன் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிராக, யாழ். பருத்தித்துறை பஸ் நிலையத்தில், இன்று காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ்,பருத்தித்துறை நகரில் ஆசிரியர்கள் போராட்டம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments