யாழ்ப்பாணத்திற்குள் ஓரே சட்டம் இல்லை – சிறிகாந்தா

You are currently viewing யாழ்ப்பாணத்திற்குள் ஓரே சட்டம் இல்லை – சிறிகாந்தா

மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதித்துள்ளன. எனினும் மல்லாகத்தில் கட்டுப்பாடுகளுடன் நினைவேந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல பருத்தித்துறையில் பொலிஸார் மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறார்கள் குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் கூட ஓரே சட்டம் கிடையாது
என சட்டத்தரனி சிறிகாந்தா நீதிமன்றில் தெரிவித்தார்.

மாவீரர் தின நினைவேந்தல்களை தடை செய்யக்கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நேற்றைய(24) விசானையின் போது தனது சமர்பனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

புலிகள் அழிக்கப்பட்டதாக அரசு கூறுகின்றது. கடந்த வருடம் இல்லாத ஆபத்து இந்த வருடம் வந்துவிடப் போகின்தா?

கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நாளை தடுக்க முயன்றீர்கள் என்றால் கொரோனாவுக்கே பிடிக்காது . ஏனெனில் கொரோனாவோடு வாழப்பழகும்படி அரசு சொல்கின்றது. வடக்கு மக்கள் சுகாதார விதிகளை முறையாக பேனுகின்றனர் என இராணுவத் தளபதிகூட கூறியிருந்தார். கடந்த ஆண்டு மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது இந் ஆண்டு மாத்திரம் ஏன் தடை

இலங்கையில் ஒரே சட்டம் நடைமுறையில் உள்ளதெனக் கூறுகின்றனர். ஆனால் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்க மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. எனினும் மல்லாகத்தில் கட்டுப்பாடுகளுடன் நினைவேந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல் பருத்தித்துறையில் பொலிஸார் மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறார்கள் குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் கூட ஓரே சட்டம் கிடையாது. இதில் பொலிஸாரை குறைகூற முடியாது அவர்கள் வெறும் கருவிகள். என்றார்.

பகிர்ந்துகொள்ள