யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்ப்பாணத்திற்குள்  நுழைந்தவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

கொழும்பு கொரோனா அபாய வலயத்திலிருந்து திருட்டுத்தனமாக பாரவூர்திக்குள் பதுங்கி யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த எட்டுப் பேரையும், பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை இராணுவமுகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்த எட்டுப் பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிவான், அவர்களை விடத்தல்பளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்த உத்தரவிட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments