யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டவர் திடீர் மரணம்!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர், கொரோனா சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , கொரொனா தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று (23) இரவு உயிரிழந்துள்ளார்.

எம்.அ.நசார் (62) என்பவரே உயிரிழந்தார்.

கடந்த 22ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியிலிருந்து சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், நேற்றிரவு திடீரென அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் தாழ் குருதியழுத்தத்தால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

அவரது குடும்பத்தினர் அனைவரும் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments