யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் தொற்று ஏனைய மாவட்டங்களில் குறைகிறது!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் தொற்று ஏனைய மாவட்டங்களில் குறைகிறது!

வடக்கில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற அதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தொற்று நோய் குறைந்து வருவது சுகாதார அமைச்சின் அண்மைய தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமையும் 121 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டது.

அதேவேளை, முல்லைத்தீவில் -06, வவுனியாவில் -09, மன்னாரில் -03 மற்றும் கிளிநொச்சியில் -02 பேருக்கே நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இன்று காலை வெளியிட்டுள்ள தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் வடக்கில் நேற்று மொத்தம் 141 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

புதிய தொற்று நோயாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,760ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சியில் – 1,421, முல்லைத்தீவில் – 1,286, வவுனியாவில் – 1,417, மன்னாரில் – 941 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகியுள்ளதாகவும் கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 02 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று பகல் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்களான 91 வயதுடைய யோசேப் புளோரன்ஸ், 78 வயதுடைய சின்னத்தம்பி சின்னப்பு, யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 86 வயதுடைய அ.அருளப்பு ஆகிய மூவரும்

மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 74 வயதுடைய சண்முகம் செல்லம்மாவும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments