யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியுடன் தொடர்புடைய மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர், வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேர் அடங்கலாக 11 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பு உடையவர்கள் என சுய தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள