யாழ்ப்பாணத்தில் நேற்று 27 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று 27 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் 294 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். நகர் பகுதி வர்த்தகர்கள் ஆறு பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர், யாழ். பல்கலைக்கழக மாணவி என 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 320 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாழ் நகர புதிய சந்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 464 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது 11 பேருக்கு தொற்று உறுதியானது.

இதன்படி வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் 6 பேர், வெளிநோயாளர் பிரிவில் ஒருவர் – திருநெல்வேலியில் தனிமைப்படுத்தி இருந்த யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வவுனியா மாணவி, மற்றுமொருவர், உடுவில் பிரதேசத்தில் 2 பேர், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அறிகுறியுடன் சென்ற ஒருவர் என 11 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை

இலங்கையில்  மேலும் 139 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments