யாழ்ப்பாணத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 9 பேர் உள்ளிட்ட 12 பேருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும், தாதிய மாணவர் ஒருவருக்கும், வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.

தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மூவருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள