யாழ்ப்பாணத்தில் மூவர் கொரோனாவுக்குப் பலி!!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மூவர் கொரோனாவுக்குப் பலி!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் நேற்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 69 வயதடைய ஒருவர் தனது வீட்டில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெடுத்தீவைச் சேர்ந்த 70 வயதான முதியவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், காரைநகரைச் சேர்ந்த 45 வயதான ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 43ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments