யாழ்ப்பாணத்தில் 995 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

யாழ்ப்பாணத்தில் 995 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 955 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மாவட்டத்தில் இதுவரை 232 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொற்று உறுதியானோரில் 190 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 487 குடும்பங்களை சேர்ந்த 955 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக தொற்று அதிகரித்து வருவது காவலைக்குரியது என குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிலைமையை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

பகிர்ந்துகொள்ள