யாழ்ப்பாணம் கிளிநொச்சியிலும் மழையால் மக்கள் பாதிப்பு!!

யாழ்ப்பாணம் கிளிநொச்சியிலும் மழையால் மக்கள் பாதிப்பு!!

யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பத்தை சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மழையின் தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

கிளிநொச்சி மாவட்டத்தில் 407 குடும்பங்களை சேர்ந்த 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 9 வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments