யாழ்ப்பாணம் – கிளிநொச்சி 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி  11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 248 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில்

கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த 11 போில் பூநகரியை சேர்ந்த 7 பேருக்கும், கொழும்பலிருந்த வந்த யாழ்.மருதங்கேணியை சேர்ந்த 2 பேருக்கும், 

சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவருக்குமாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் 441 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள