யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 9 பேருக்கு கொரோனா!!

You are currently viewing யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 9 பேருக்கு கொரோனா!!

வடக்கில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி வர்த்தக நிலையங்களில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பரிசோதனையில் பங்கேற்ற யாழ்ப்பாணம் குமாரசாமி வீதியைச் சேர்ந்த ஒருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுநர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள