யாழ்மண்ணில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்!!

யாழ்.கொழும்புத்துறை கணக்கர்கடை சந்தி பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதுதொடர்பில் இளம் பெண்ணின் வீட்டுக்கு இன்றைய தினம் சென்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது சிசு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்நிலையில் சிசு இயற்கையாக உயிரிழந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ பரிசோதனையின் பின் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments