யாழ் அனலைதீவில் மஞ்சலுடன் இருவர் கைது!

யாழ் அனலைதீவில் மஞ்சலுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் பலநூற்றுக்கணக்கான கிலோக்கிராம் நிறைகொண்ட மஞ்சள் கட்டிப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு வீடுகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் படைத்தரப்பினர் அவற்றை மீட்டிருப்பதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மஞ்சள் பொதிகள் இந்தியாவில் இருந்து வந்தனவா? என்ற சந்தேகம் நிகழ்வதால் சம்பந்தப்பட்ட இருவரும் மஞ்சள் பரிமாற்றத்தின் போது யாரைத் தொடர்புகொண்டார்கள் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அனலைதீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள