யாழ்.உரும்பிராயில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு!

யாழ்.உரும்பிராயில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு!

யாழ்.உரும்பிராய் வடக்கு பேய்ச்சியம்மன் ஆலயத்திற்கு அருகில் வீட்டில் தனிமையில் வசித்தவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்த வயதான ஒருவர் குறித்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய நடமாட்டத்தை காணாத நிலையில் அயலவர்களும், உறவினர்களும் தேடியபோது 

படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்

விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

மேலும் பீ.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது. 

பகிர்ந்துகொள்ள