யாழ்.குடாநாட்டில் மேலும் 129 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்.குடாநாட்டில் மேலும் 129 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலும் 129 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 1003 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 80 பேர் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமத்தின் பாரதிபுரம் என்ற ஊரினைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர், 20 பேர் யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

இதேவேளை ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்ட 75 விற்பனை நிலையங்களுக்கு மேலதிகமாக 33 தொற்றாளர்கள் கடமையாற்றும் விற்பனை நிலையங்களை வகைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்,

தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத வர்த்தக நிலையங்கள் இன்று காலை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவருடைய தரவின் அடிப்படையில்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 88 பேர்,

யாழ்ப்பாணம் வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments