யாழ். குடாவை நெருங்கும் கொரோனா அவலம்: ஒரே நாளில் ஐவர் பலி – மொத்த உயிரிழப்பு 62 ஆக உயர்வு!

You are currently viewing யாழ். குடாவை நெருங்கும் கொரோனா அவலம்: ஒரே நாளில் ஐவர் பலி – மொத்த உயிரிழப்பு 62 ஆக உயர்வு!

யாழ். குடாநாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் ஐவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 09.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர்

புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர்

பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர்

கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர்

இவ்வாறு யாழ்குடாநாட்டைச் சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூன்-14 ஆம் திகதி வரை யாழ். குடாநாட்டில் 58 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்த நிலையில் நேற்று உயிரிழந்த நால்வருடன் அவ் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments