யாழ் குருநகரில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்!

யாழ் குருநகரில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்!

ஆட்களற்ற வீட்டை உடைத்து சுமார் 20 பவுண் நகைகள், மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

குறித்த இளைஞனிடமிருந்து நகைகளை வாங்கி அடகுவைத்த ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நகைகளும் மீட்கப்பட்டுள்ளது

இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது. வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்ற நிலையில்,  வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டன.

திருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments