யாழ் குளிர்களி இல்லத்தில் பணியாற்றிய சிறுவன் பலி!

யாழ் குளிர்களி இல்லத்தில் பணியாற்றிய சிறுவன் பலி!

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் உள்ள குளிர்களி இல்லத்தில் பணியாற்றும் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (17) காலை மின்சார தாக்கி உயிரிழந்துள்ளான்.

குறித்த குளிர்களி இல்லத்தின் கட்டடத்தில் நான்காம் மாடியில் உருளைக் கிழங்கு வெட்டும் உபகரணத்தில் சிறுவன் வேலையில் இருந்துள்ளார். இதன்போது அந்த உபகரணத்துக்கான மின் இணைப்பில் இருந்து மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த நிலையில் சிறுவன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டான். எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சங்கானை, தேவாலய வீதியைச் சேர்ந்த நல்லகுமார் நிசாந்தன் (வயது -17) என்ற சிறுனே உயிரிழந்துள்ளான்.

பகிர்ந்துகொள்ள