யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசேதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சுகாதர வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் போன்றோருக்கு ஆரம்ப சுகாதார பரிசோதனை நிலையம் பிரதான வீதி மடத்தடி என்னுமிடத்தில் நடைபெற தொடங்கியுள்ளது.
கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் அனைத்து சாரதிகள் மற்றும் உதவியாளர்களை இப் பரிசோதனையில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்றும்.
சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் முழு விபரங்களையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மாநகர சபை யாழ்ப்பாணம் ( நல்லூர் சிவன் கோயிலுக்கு அருகில்) உள்ள அலுவலகத்தில் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மேற்படி பரிசோதனை செய்யாத சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள