யாழ் – சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி!

யாழ் – சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி அளிக்கவுள்ளது. விரைவில் இது தொடர்பாக இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments