யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கறுப்பு யூலை வலிசுமந்த நினைவேந்தல்!

You are currently viewing யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கறுப்பு யூலை வலிசுமந்த நினைவேந்தல்!

“கறுப்பு யூலை” நிகழ்வு காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் மனதில் ஆறாத காயங்களையும், தீராத வலிகளையும் தமிழர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த 1983-ம் ஆண்டின் கறுப்பு ஜூலையும், இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த 2009-ம் ஆண்டும் என்றென்றும் தமிழர்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.

கறுப்பு யூலை தமிழின அழிப்பு 42 ஆவது ஆண்டு   நினைவு  இன்றைய தினம் புதன்கிழமை   (23.07.2025 )வட தமிழீழம் , யாழ்ப்பாண பல்கலைகழகத்தில்   நினைவேந்தப்பட்டது . யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கறுப்பு யூலை வலிசுமந்த நினைவேந்தல்! 1
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கறுப்பு யூலை வலிசுமந்த நினைவேந்தல்! 2
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கறுப்பு யூலை வலிசுமந்த நினைவேந்தல்! 3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply